என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பூஜை காலம் மாற்றம்
Byமாலை மலர்27 July 2018 11:05 AM IST (Updated: 27 July 2018 11:05 AM IST)
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூஜை காலங்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சந்திர கிரகணம் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணி முதல் நாளை(சனிக்கிழமை) அதிகாலை 3.50 மணி வரையிலும் ஏற்படுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 5 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோவில் நடை திருக்காப்பிடப்படுகிறது.
இரவு 10 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. இரவு 10.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, இரவு 10.50 மணிக்கு சுவாமி மீது பட்டு சாத்தப்பட்டு, கோவில் நடை மீண்டும் திருக்காப்பிடப்படுகிறது.
சந்திர கிரகணம் முடிந்த பின்னர் நாளை (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story
×