search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 9-ந்தேதி தொடங்குகிறது
    X

    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 9-ந்தேதி தொடங்குகிறது

    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரிய நாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா, வருகிற 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரிய நாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா, வருகிற 9-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு மேல் விநாயகர் பூஜைக்கு பிறகு காலசந்தி பூஜையில் சிவன், நடராஜர், சிவகாமி அம்மன், சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதையடுத்து மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜையில் விநாயகர், மூலவர், சின்னக்குமாரர், வள்ளி- தெய்வானை, துவாரபாலகர்கள் ஆகியோருக்கு காப்பு கட்டப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி 9-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். 11 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் நிறைவு நாளான வருகிற 19-ந்தேதி விஜயதசமி ஆகும். அன்றைய தினம் மலைக்கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 3.05 மணிக்கு பராசக்திவேல் புறப்பாடு நடைபெறும்.

    பின்னர் பராசக்தி வேலுடன் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோதை ஈஸ்வரர் கோவிலில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் பராசக்தி வேல் மலைக்கோவில் வந்தடைந்து, இரவு 10 மணிக்கு மேல் சம்ரோட்சண பூஜைக்கு பின்பு ராக்கால பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×