search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியேற்றம் நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளியதையும் காணலாம்.
    X
    கொடியேற்றம் நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளியதையும் காணலாம்.

    திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மகா தீபம் 23-ந்தேதி நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோவில் கொடி மரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 22-ந் தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி காலை தேரோட்டமும், மாலை மகா தீபமும் நடைபெறுகிறது. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 24-ந்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.

    இதேபோல் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் கார்த்திகை தீப உற்சவம் வருகிற 22-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.
    Next Story
    ×