search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரங்கா... ரங்கா... கோஷம்
    X

    ரங்கா... ரங்கா... கோஷம்

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு பொருத்தமானது என்பது புரியும்.
    ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பை பார்ப்பது கண் கொள்ளா காட்சியாகும். இன்று ஸ்ரீரங்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். அவர் திருமேனி மீது பனி விழுமே, அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருவார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் அரங்கன், சேனை முதலியார் சந்நிதிக்கு வந்து நிற்பார்.

    அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படும். இதற்கு அரங்கன் மூலஸ்தானத்துக்கு மீண்டும் எழுந்தருளும்வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறார் என்று அர்த்தமாகும். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகும்.

    நாழி கேட்டால் வாசல், கொடிமரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்வார். அங்கே யஜுர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்றுமறையாகும். அதைத் தொடர்ந்து மற்ற வேதங்களையும் சொல்வார்கள். வேதங்களை கேட்டுக் கொண்டே ரங்கநாதர் பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருள்வார்.
    ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கும்.

    பரமபத வாசலின் மணிகள் ஒலிக்க, கதவுகள் திறந்து கொள்ளும்.

    ரங்கா... ரங்கா... என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கும். ரங்கநாதர் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிப்பார்.

    பிறகு அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம் வருவார். தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார். மீண்டும் அரையர் சேவை நடைபெறும். நள்ளிரவு வரை ரங்கநாதர் அங்கேயே வீற்றிருப்பார்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும்தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஸ்ரீரங்கத்தில் பரமபத வாசல் திறந்திருக்கும்.

    மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்.

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு பொருத்தமானது என்பது புரியும். ஸ்ரீரங்கத்தில் அது தனிச்சிறப்பு வாய்ந்த திருவிழாவாக விளங்குகிறது.
    Next Story
    ×