search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வைகுண்ட ஏகாதசியும் ஸ்ரீரங்கமும்
    X

    வைகுண்ட ஏகாதசியும் ஸ்ரீரங்கமும்

    கிரிவல வழிபாடு என்றால் திருவண்ணாமலையும் நினைவிற்கு வருவதுபோல வைகுண்ட ஏகாதசி என்றால் எல்லோருக்கும் ஸ்ரீரங்கமே முதலில் நினைவிற்கு வருகிறது.
    கிரிவல வழிபாடு என்றால் திருவண்ணாமலையும் நினைவிற்கு வருவதுபோல வைகுண்ட ஏகாதசி என்றால் எல்லோருக்கும் ஸ்ரீரங்கமே முதலில் நினைவிற்கு வருகிறது.

    பிரம்ம லோகத்தில் பூஜை செய்து வந்த திருமாலின் திருவுருவை பிரமன். சூரிய வம்ச அரசனான இக்ஷ்வாகுக்கு கொடுக்க, பிற்காலத்தில், அதை ராமபிரான் விபீஷணனுக்கு கொடுக்க, அவன் பெருமாள் திருமேனியை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது, இறைவன் திருவிளையாடலால் ஸ்ரீரங்கம் என்ற புண்ணிய பூமியில் நிலைத்து விட்டது.

    அங்கு தர்மவர்மனால் எழும்பிய முதற்கோயில், ஒரு காலத்தில் காவிரி வெள்ளத்தால் மறைந்து விட்டது. தெய்வீகக்கிளி ஒன்று, அவ்விடத்தின் மேன்மையை கிள்ளிவளவனுக்கு தெரிவித்தது. அவன் புதுப்பித்த கோயிலையே இன்று காண்கிறோம். அரங்கனே திருவரங்கத்தை வைகுண்டமாகக் கருதியதால் தான் இன்றும் பகல்பத்து, ராப்பத்து என்று வைகுண்ட ஏகாதசியின் போது மிகமிக விரிவான திருவிழா நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசியன்று திருமாலை வழிபடுவோர் வைகுண்டத்துக்கே செல்வதாக உணர்த்துகின்ற நிகழ்வே வைகுண்டவாசல் அல்லது பரமபதவாசல் நுழைகின்ற வழக்கமாகும். 
    Next Story
    ×