search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்நாளெலாம் வணங்கும் ஆஞ்சநேயர்
    X

    வாழ்நாளெலாம் வணங்கும் ஆஞ்சநேயர்

    வெங்கடாசலபதி அருளால் பிறந்த குழந்தை என்பதால், எக்காலமும் வெங்கடாசலபதியை வணங்கியபடி அவர் எதிரிலேயே இருக்க வேண்டும் என்று ஆஞ்சநேயருக்கு அஞ்சனாதேவி கட்டளையிட்டாள்.
    அஞ்சனாதேவி திருமலையில் தவம் இருந்து பெற்ற புதல்வன் ஆஞ்சநேயர். வெங்கடாசலபதி அருளால் பிறந்த குழந்தை என்பதால், எக்காலமும் வெங்கடாசலபதியை வணங்கியபடி அவர் எதிரிலேயே இருக்க வேண்டும் என்று ஆஞ்சநேயருக்கு அஞ்சனாதேவி கட்டளையிட்டாள்.

    விளையாட்டுப்பருவத்தில் இருந்த ஆஞ்சநேயர், அஞ்சனாதேவி தலை மறைந்ததும் காட்டுக்குள் ஓடி விடுவார். இதனால் அஞ்சனாதேவி கோபமடைந்து அவரைத் தேடிப்பிடித்து வெங்கடாசலபதி கோவிலில் ஏழுமலையானுக்கு நேர் எதிரில் வணங்கும் கோலத்தில் நிற்க வைத்தாள். மற்ற வானரங்களின் உதவியால் விண்வெளியே மாயக்கயிறாக்கி ஆஞ்சநேயரின் கரங்களில் விலங்கிட்டாள். அன்று முதல் இன்று வரை, மகாதுவாரத்திற்கு நேர் எதிரே உள்ள ஒரு சந்நிதியில், ஆஞ்சனேயர், ஏழுமலையானை வணங்கும் நிலையில் காட்சி அளிக்கிறார்.

    இதை பிரதிபலிக்கும் வகையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திலும் மூலவருக்கு நேர் எதிரே வெளி மண்டபத்தில் ஆஞ்சநேயர் தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது.
    Next Story
    ×