search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.
    X
    ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் கோவில் ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழாவையொட்டி ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
    பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த புதன்கிழமை பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கத்திலிருந்து பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாள் மேலூர் வழியாக வந்து காவிரி ஆற்றில் இறங்கி நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜீயபுரத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் நேற்று அதிகாலையில் அங்கிருந்து பல்லக்கில் எழுந்தருளி அந்தநல்லூர், அம்மன்குடி, திருச்செந்துறை போன்ற பகுதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு நம்பெருமாள் சேவை சாதித்தார்.

    இதைத்தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் அருகிலுள்ள குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் தயிர்சாதமும், அரைக்கீரையும் நைவேத்தியம் செய்யப்பட்டது. நண்பகல் பூஜை முடிந்ததும், முத்துக்கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு மாலை வரை சேவை சாதித்தார். பின்னர் மீண்டும் பல்லக்கில் காவிரி ஆற்றின் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலை அடைந்தார். 
    Next Story
    ×