search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவிடை மருதூர் மருதவாணரின் அன்பிற்பிரியாள்
    X

    திருவிடை மருதூர் மருதவாணரின் அன்பிற்பிரியாள்

    திருவிடை மருதூர் கோவிலின் முதல் பிரகாரத்தில் அன்பிற்பிரியாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    திருஞான சம்பந்தர் திருவிடை மருதூர் தலத்துக்கு வந்தபோது, வழியெல்லாம் சிவலிங்கமாகத் தோன்றியது. எனவே தரையில் கால் பதிக்க அவர் அஞ்சினார். அப்போது, சிவன் அம்பிகையை அனுப்பினார்.

    அவள், சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தாள். இவளே பிரகாரத்தில் மருதவாணருடன் (சிவன்), கைலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை “அன்பிற் பிரியாள்’ என அழைக்கின்றனர். அம்மன் கோவிலின் முதல் பிரகாரத்தில் அன்பிற்பிரியாளுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை எழுதி வைத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    1. அருள்மிகு மகாலிங்கப்பெருமானை வழிபட்டவர்கள் இச்சன்னதியில் எழுந்தருளிக்கும் அன்பிற்பிரியாளைத் தவறாது வழிபட வேண்டும்.

    2. குழந்தைப்பேறு இல்லாதவர்களும், கரு உண்டாகி அடிக்கடி கருகலைந்தும் குறைபிரசவம் கண்டவர்களும் அன்பிற்பிரியாளை வணங்கி பிரார்த்தித்து வருபவர்களுக்கு கருஉருவாகி கருகாக்கப்பட்டு குழந்தை பாக்கியம் உண்டாகி சுகப்பிரசவம் அருள்வாள்.

    3. இதுபோல் பாதிக்கப்பட்ட சேலத்து செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்த அம் மையார் ஒருவருக்கு அடிக்கடி கரு உருவாகி கரு கலைந்து குடும்பத்தில் மன உளைச்சல் ஏற்பட்டதால், இந்த அன்பிற்பிரியாள் அம்மனை பிரார்த்தனை செய்து, இந்த சன்னதியை புதிப்பித்து, தனிக்கோயிலாக அமைத்தும் திருப்பணிகள் செய்து கொடுத்ததின் பலனாக அவர்களுக்கு கரு உருவாகி, கருகாக்கப்பட்டு குழந்தை பாக்கியம் பெற்று அவர்கள் வம்சம் தழைத்தோங்கி வாழ்வாங்கு வாழ்ந்து வருவது உண்மைச் சம்பவமாகும்.

    4. அன்பிற்பிரியாள் அம்மனை வேண்டி குழந்தைபேறு பெற்றவர்கள் தொட்டில் கட்டி அம்மையை வழிபடுவது வழக்கத்தில் ஒன்று.

    5. எனவே அன்பிற்பிரியாள் அம்மையை வணங்கி வம்சாவளியை வளர்த்துக் கொள்ள பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டுகிறோம். மகாலிங்கசுவாமியை சுற்றி வரும் போது பிரகாரத்திலும் அன்பிற்பிரியாளுக்கு மலை மீது அமர்ந்த கோலத்தில் தனி சன்னதி உள்ளது.
    Next Story
    ×