search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
    X
    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    நாடியம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    பட்டுக்கோட்டையில் நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், இன்னிசை கச்சேரியும் நடைபெற்று வருகிறது. கடந்த 9-ந்தேதி வெண்ணெய்த்தாழியும், 10-ந்தேதி மாவிளக்கு திருவிழாவும் நடைபெற்றது.

    விழாவில் நேற்றுமுன்தினம் அலங்கரிக்கப்பட்ட தேரில் நாடியம்மன் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு விசேஷ பூஜை நடைபெற்றது.

    நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் தேர் பெரிய தெருவிலிருந்து மணிக்கூண்டு தலையாரித்தெரு வழியாக தேரடித்தெரு சென்று நிலையை வந்தடைந்தது. இன்று (சனிக்கிழமை) காலை மீனாட்சி அம்மன் அலங்காரமும், இரவு முத்துப்பல்லக்கில் நாடியம்மன் கோட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×