என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
Byமாலை மலர்18 April 2019 9:18 AM IST (Updated: 18 April 2019 9:18 AM IST)
அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் சிவசிவ கோஷங்கள் முழங்க திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புகழ்மிக்க அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஈஸ்வரனும், கருணாம்பிகையும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற 7 திருத்தலங்களில் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் முதலாவதாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதை தொடர்ந்து 11-ந் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும், 12-ந் தேதி பூத வாகனம், அன்ன வாகனம் அதிகாரநந்தி கிளி வாகன காட்சிகளும், 13-ந் தேதி புஷ்ப பல்லக்கு கைலாச வாகன காட்சி ஆகியவை நடந்தன. 14 -ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடந்தது.
பின்னர் 15-ந் தேதி கற்பக விருட்சம் திருக்கல்யாண உற்சவம் மற்றும் யானை வாகன காட்சி நடந்தது. உற்சவ மூர்த்திக்கும், கருணாம்பிகை அம்மனுக்கும் ஊஞ்சல் விழா நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் திருமாங்கல்ய பூஜை செய்து கல்யாண உற்சவத்தை நடத்தி வைத்தார். அப்போது பெங்களூரு வேத ஆகம பாடசாலை மாணவர்கள மந்திரம் மற்றும் திருமுறைகள் பாடினர். இதைத்தொடர்ந்து யானை வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. 16-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் விநாயகர், அவினாசியப்பர், கரிவரதராஜ பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின்னர் காலை 6 மணிக்கு நாதஸ்வர இன்னிசை முழங்க உற்சவமூர்த்திகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரிய தேருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிர்வேட்டுகள் முழங்க நாதஸ்வர இசை, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க, சுவாமிகள் ரதத்தின் மீது அமர்த்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து பெரிய தேரில் சோமாஸ்கந்தர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சிறிய கருணாம்பிகை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பெரிய தேர் மற்றும் சிறிய தேரில் எழுந்தருளிய சாமிகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின்னர் நேற்று காலை உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 9 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தேரின் இரண்டு சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் ஜன்னை மிராசுகள் ஜன்னைபோட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர். ஆன்மிக சான்றோர், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் “சிவ சிவ” கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேருக்கு முன்பாக பெண் பக்தர்கள் நடனமாடி சென்றனர்.
இதையடுத்து பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து சென்றது. தேருக்கு பின்னால் நின்றிருந்த இரண்டு பொக்லைன் எந்திரங்கள் தேரை தள்ளியது. “அழகுன்னா அழகு அவினாசி தேர் அழகு” என்பதற்கு ஏற்றவாறு தேர் அசைந்தாடி நகர்ந்தது. பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். கோவை-அவினாசி மெயின் ரோடு, மேற்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் வலம் வந்து பிற்பகல் 2.30 மணிக்கு நிலையை அடைந்தது.
தேர்த்திருவிழாவை காண அவினாசி மற்றும் அவினாசியை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர்.
இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் அவினாசி திணறியது. பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர், மோர் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு அனைத்து தேர் செல்லும் அனைத்து ரதவீதிகளும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. வாழைகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. தேர் சென்ற வீதிகளிலும் எல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடக்கிறது. பின்னர் மாலை வண்டி தாரை பரிவேட்டையும், நாளை (வெள்ளிக்கிழமை) தெப்பத்தேர் நிகழ்ச்சியும், 20-ந் தேதி நடராஜர் தரிசனம், 21-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவில் சபா மண்டபத்தில் தினசரி மாலை 6 மணி முதல் பக்தி இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
தேர்த் திருவிழாவை முன்னிட்டு அவினாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில் இருபத்தி மூன்றாம் ஆண்டாக பூவசாமிகவுண்டர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் திருவிழா காண வந்த பல ஆயிரக்கணக்கானோருக்கு அவினாசி மாருதி சூப்பர் ஸ்டோர் சார்பாக பழரசம் வழங்கப்பட்டது.

Next Story
×