என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு
Byமாலை மலர்15 May 2019 9:05 AM IST (Updated: 15 May 2019 9:05 AM IST)
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை மேல்சாந்தி வாசுதேவ நம்பூதிரி திறந்து வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
இன்று (புதன்கிழமை) அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அதன்பிறகு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
தொடர்ந்து ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 20-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

Next Story
×