search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி பெருமாள்
    X
    திருப்பதி பெருமாள்

    ஏழுமலையானை வெறுங்கை வேடன் என அழைக்க காரணம்

    திருப்பதி ஏழுமலையானை ‘வெறுங்கை வேடன்’ என்றும் அழைக்கிறார்கள். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் அபிஷேகத்தின்போது, ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

    ஏழுமலையான் ஆலயத்தின் தல விருட்சம் புளிய மரம் ஆகும். பொதுவாக திருமாலின் எந்த ஒரு அவதாரமாக இருந்தாலும், கையில் ஆயுதம் தாங்கிய நிலையில் இருப்பதை நாம் பார்த்திருப்போம்.

    ஆனால் திருப்பதி ஏழுமலையானின் கரத்தில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணியாக நின்று, பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார். இதனால் இவரை ‘வெறுங்கை வேடன்’ என்றும் அழைக்கிறார்கள்.

    Next Story
    ×