search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோலைமலை முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது
    X
    சோலைமலை முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது

    சோலைமலை முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது

    இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் சோலைமலை முருகன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக அரசு உத்தரவின் பேரில் பக்தர்கள் யாருக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
    அழகர்கோவில் மலை உச்சியில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 6-வது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத சஷ்டி சிறப்பு பூஜைகள் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் நடந்தது.

    காலை தொடங்கிய அபிஷேக நிகழ்ச்சியில் மேளதாளம் முழங்க உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம், தேன், மஞ்சள், தயிர், விபூதி பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள் நடந்தது.

    பின்னர் மல்லிகை, தாமரை, விரிச்சி, சம்மங்கி, உள்ளிட்ட பல்வேறு வண்ண மாலைகளால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் சோலைமலை முருகன் கோவிலில் நேற்று முதன்முதலாக தமிழில் அர்ச்சனை தொடங்கியது. தொடர்ந்து வழக்கம் போல் தேவாரம் பாடல்கள் பாடப்பெற்றது. கொரோனா தொற்று காரணமாக அரசு உத்தரவின் பேரில் பக்தர்கள் யாருக்கும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×