என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் புனித நீராட அனுமதி
Byமாலை மலர்26 Nov 2021 1:40 PM IST (Updated: 26 Nov 2021 1:40 PM IST)
ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து இருவழிகளில் சன்னிதானம் செல்வார்கள்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பிரச்சினை குறைந்ததால் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் பக்தர்கள் பம்பையில் புனித நீராடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் சபரிமலை வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்து பின்னர் பம்பையில் ஓய்வெடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளிமாநிலங்களில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் இருந்து இருவழிகளில் சன்னிதானம் செல்வார்கள்.
கொரோனா பிரச்சினைக்கு பிறகு ஒரு வழிப்பாதையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி நீலிமலை பாதை வழியாகவும் பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Next Story
×