search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆண்கள் மட்டும் வழிபட்ட வினோத திருவிழா
    X
    ஆண்கள் மட்டும் வழிபட்ட வினோத திருவிழா

    ஆண்கள் மட்டும் வழிபட்ட வினோத திருவிழா

    திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பணசாமி கோவிலில் ஆண் பக்தர்கள் மட்டும் திரண்டு இருந்து சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை படைத்து வழிபட்ட வினோத திருவிழா நடந்தது.
    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் செல்லும் வழியில் உச்சிக் கருப்பணசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுாமிக்கு உருவம் கிடையாது. ஆனால் பெரிய அளவில் 2 கல்தூண்கள் கருவறையாக அமைந்து உள்ளது. அதன் மையத்தில் சுமார் 5 அடி உயரம் உள்ள 2 அரிவாள் உள்ளது. மேலும் காற்று ஓசைக்கு ஒலித்து கொண்டே இருக்ககூடிய ஏராளமான மணிகள் உள்ளன. இந்த கோவிலில் பாரம்பரியமாக தொன்று தொட்டு ஆண் பக்தர்கள் மட்டுமே வழிபட்டு வருகிறார்கள்.

    கோவிலுக்கு வந்து செல்லக்கூடிய ஒவ்வொரு பக்தரும் அவரவர் நெற்றியில் விபூதியை பூசிக்கொள் கிறார்கள். அதே சமயம் கோவிலை விட்டு வெளியேறும்போது நெற்றியில் பூசிய விபூதியை அழித்துவிட்டுசெல்கிறார்கள். மேலும் பெண்கள் கண்களுக்கு தெரியக்கூடாது என்பதால் சாமிக்கு படைக்க கூடிய பழங்களை கோவிலை விட்டு வெளியே கொண்டு செல்லக்கூடாது.

    இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு வெள்ளிக் கிழமை அன்று கனிகள் மாற்றும் திருவிழா தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் உள்ள சாமிபெட்டி இருக்கும் இடத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாழைப் பழங்கள், மாம்பழங்கள் மற்றும் பலாபழங்கள் ஆகிய முக்கனிகளை ஒரு டிராக்டரில் வைத்து ஊர்வலமாக புறப்பட்டு உச்சிக்கருப்பணசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர்உச்சிக்கால வேளையில் சாமிக்கு குவியலாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் திரண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
    Next Story
    ×