search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவ காளியம்மன் கோவிலில் 71 அடி உயர சிலை அமைப்பு: ஏப்ரல் 23-ந்தேதி கும்பாபிஷேகம்
    X

    நவ காளியம்மன் கோவிலில் 71 அடி உயர சிலை அமைப்பு: ஏப்ரல் 23-ந்தேதி கும்பாபிஷேகம்

    • புஞ்சைபுளியம்பட்டி அருகே அணையபாளையத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு நவ காளியம்மன் அருள் பெற அழைக்கிறோம்.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே அணையபாளையத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவிலில் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு 71 அடி உயரத்தில் நவ காளியம்மன் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கோவிலில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், ஆதி கருப்பண்ணசாமி, வராகி அம்மன், காலபைரவர், சப்த கன்னிமார்கள், பூவாடகாரி அம்மன் ஆகிய சாமிகளுக்கு தனித்தனியே சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நவ காளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அய்யாகண்ணு சாமி கூறியதாவது:-

    நவ காளியம்மன் என்னுடைய கனவில் தனக்கு 71 அடி உயரத்தில் சிலை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதின் பேரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிலை அமைக்கும் பணி தொடங்கியது.

    தமிழ்நாட்டில் எங்கும் காணாத அளவுக்கு 8 கைகளுடன் வீற்றிருக்கும் நவ காளியம்மன் கோவில் பணிகள் நடைபெற்று தற்போது முடிவுற்ற நிலையில் உள்ளது. இதேபோல் மற்ற சாமிகளுக்கும் தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டு வருகிறது.

    வருகிற ஏப்ரல் மாதம் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடக்கிறது. அவினாசி ஆதினம் காமாட்சி தாசர் சாமி தலைமையில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சரவணம்பட்டி கவுமார மடாலயம் ராமனந்த குமரகுருபர அடிகளார், ஆனமலை தேவனாந்த சரஸ்வதி சாமி, ஸ்வத சிகாநந்த சரஸ்வதி சாமி, திருவண்ணாமலை சிவமணி சாமி ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு நவ காளியம்மன் அருள் பெற அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×