search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தென்னகத்தின் கயா
    X

    தென்னகத்தின் கயா

    • ஆவனியில் ராமலிங்கேஸ்வரா என்ற கோவில் உள்ளது.
    • 1,100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது.

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள ஆவனி என்ற இடம் `தென்னகத்தின் கயா' என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் புராதன வரலாற்றுடன் (ராமாயணம்) ஒப்பிட்டு பேசப்படுகிறது. அதாவது ஆவனி மலைக்கு அருகே வால்மீகி ஆசிரமம் உள்ளது. ராமரை பிரிந்த சீதை இந்த ஆசிரமத்தில் தான் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    இத்தகைய புகழ்பெற்ற ஆவனியில் ராமலிங்கேஸ்வரா என்ற கோவில் உள்ளது. எழில்மிகு கட்டிடக்கலை அம்சத்துடன் காட்சி தரும் இந்த கோவிலில் ராமேஸ்வரா, லட்சுமேஸ்வரா, பரதேஸ்வரா, சுக்ரீவேஸ்வரா போன்றோருக்கு 12 கோவில்கள் உள்ளன.

    நெலபா ஆட்சி காலத்தில் அதாவது 1,100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது. பின்னர் சோழர்கள் காலத்தில் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

    Next Story
    ×