search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அவினாசி லிங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடக்கம்
    X

    அவினாசி லிங்கேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடக்கம்

    • தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி.
    • திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 2-ந் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி கும்பாபிஷேக விழா நாளை 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அதன்படி நாளை மூத்தபிள்ளையார் வழிபாடு நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது.

    29-ந் தேதி காலை 9 மணிக்கு வேள்விச்சாலை அழகு பெறச்செய்தல், மாலை 6 மணிக்கு திருக்குடங்களில் திருவருள் சக்திகளை ஏற்றி வைத்தல், 7 மணிக்கு திருக்குடங்கள் வேள்விச்சாலை எழுந்தருளல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது.

    இரவு 9 மணிக்கு பேரொளி வழிபாடு மலர் போற்றுதல் ஆகியவையும் 30-ந்தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், 10 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜை மற்றும் அருட் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    31-ந்தேதி காலை 6 மணிக்கு 4-ம்கால பூஜையும், 10 மணிக்கு சாமிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி பூஜையும், பிப்ரவரி மாதம் 1-ந்தேதி காலை 6 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜையும், காலை 9 மணி முதல் 10.15 மணிக்கு அவினாசி அப்பர் துணை நிற்கும் தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணி முதல் 9 மணிக்குள் 7-ம் கால பூஜையும் நடக்கிறது.

    2-ந்தேதி காலை 6 மணிக்கு 8-ம் கால பூஜையும், 8 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு அவினாசியப்பருக்கும் ஐம்பெரும் தெய்வங்களுக்கும் திருவீதி உலா நடக்கிறது.

    Next Story
    ×