என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
15 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பவானி கூடுதுறையில் புனித நீராட, பரிகாரம் செய்ய அனுமதி
- இன்று காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கினர்.
- பவானி கூடுதுறையில் புனிதநீராடி பரிகாரம் செய்து சென்றனர்.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிரசித்தி பெற்ற பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையை மூழ்கியபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் கரையோரம் உள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து கடந்த 3-ந்தேதி முதல் பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. தற்போது 22 ஆயிரம் கனஅடி மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி கூடுதுறையில் இன்று முதல் பக்தர்கள் புனித நீராடவும், பரிகாரம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதற்காக நேற்று மாலை முதல் படித்துறை பகுதியில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டதால் இன்று காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் பவானி கூடுதுறையில் புனிதநீராடி பரிகாரம் செய்து சென்றனர். 15 நாட்களுக்கு பின்பு பவானி கூடுதுறையில் புனிதநீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.