search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நரசமங்கலம் கால பைரவர் கோவிலுக்கு செல்லும் கிரிவலப் பாதையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

    • பாதை சேதமடைந்து செடி-கொடிகளால் மண்டிக் கிடக்கின்றன.
    • கால பைரவர் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அச்சப்படுகின்றனர்

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்துள்ளது தூசி-மாமண்டூர் கிராமங்கள். இந்த கிராமங்களுக்கு மேற்கு பகுதியில் மாமண்டூர் பெரிய ஏரி உள்ளது. இதன் அருகே நரசமங்கலம் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தின் பின்புறத்தில் மாமண்டூர் ஏரி கரைகள் குன்றுகள் போல் இயற்கையாகவே அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு செய்யாற்றில் இருந்து தண்டரை கால்வாய் மூலமும், பாலாற்றில் இருந்து ராஜா கால்வாய் மூலமும் தண்ணீர் வருகிறது. இந்த ஏரியால் 4200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரிக்கரையின் உச்சியில் கால பைரவர் கோவிலும், ஏரிக்கரையின் அடிவாரத்தில் குடவரை கோவிலும் உள்ளது. இந்த இரண்டு கோவில்களும் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    கால பைரவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் செல்ல போதிய பாதை வசதி இல்லாததால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல், ஏரிக்கரையின் அடிவாரத்தில் இருந்து கால பைரவர் கோவிலுக்கு செல்லும் பாதையும் சேதமடைந்து செடி-கொடிகளால் மண்டிக் கிடக்கின்றன. இதனால் ஏரிக்கரையின் உச்சியில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அச்சப்படுகின்றனர்.

    எனவே, மாமண்டூர் கால பைரவர் கோவிலின் கிரிவலப் பாதையையும், நடைபாதையையும் சீரமைக்க தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×