search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முருகனை வழிபட்டால் பிறவிப்பலன் பெறலாம்..!
    X

    முருகனை வழிபட்டால் பிறவிப்பலன் பெறலாம்..!

    • முருகனின் படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன.
    • முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார்.

    பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்துச் சென்றன.

    அப்போது வழியில் ஒரு சிறியமலை முருகனின் படைகளை வழிமறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அங்கிருந்த நாரதர் அம்மலையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

    இந்த மலை ரவுஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் எல்லையில்லா தீமைகளை புரிந்த தீயசக்தி ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னைக் கடந்து செல்பவர்களை ஏமாற்றித் தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று மலையை பற்றிச் சொன்னவர், இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில் சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்ட வனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

    அதைக்கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டார். தலைவரின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. விஷயம் அறிந்து தாரகாசுரனும், பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். ஆயுதங்களும், அஸ்திரங்களும் மோதின. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

    போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான வீரகேசரியைத்தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்ததைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகா சுரனைக் கடுமையாகத் தாக்கினான். கோபம் கொண்ட தாரகாசுரன் தினமும் பூஜை செய்யப்பட்ட சிவசக்தியை எறிய, தன் கூர்மையான திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவையும், முருகப்பெருமானையும் தாரகாசுரன் எள்ளி நகையாட, தலைமையற்ற நிலையில் முருகப்படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின.

    மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மூர்க்கத்தனமாகத் தாக்க, எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலைதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது வேறுவழியின்றி மலைக்குள் அகப்பட்டு நிற்கும் வேளை வெளியில் தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகனின் படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன.

    தளபதியும், வீரர்களும் இடர்பட்டும், தாக்கப்பட்டும் நிற்பதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமையறியாத தாரகாசுரன், சிறுவன் என எள்ளி நகையாட, கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனைக் கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான்.

    முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், கிரவுஞ்ச மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகா சுரனைக் கொன்றது. தாரகாசுரனைக் கொன்ற முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். பங்குனி உத்திரத்தன்று விரதமி ருந்து, திருமுகனை வேண்டினால், பிறவிப்ப லனையும், நாற்பத் தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து இவ்விரதம் இருந்து வந்தால் அடுத்த பிறவியில் உலகத்தவர்கள் வணங்கும் தெய்வீகத் தன்மையையும் அடையலாம் என புராணங்கள் கூறுகின்றன.

    Next Story
    ×