search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 23-ந்தேதி தொடக்கம்
    X

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 23-ந்தேதி தொடக்கம்

    • இந்த திருவிழா வருகிற 1-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 1-ந்தேதி காலை 9 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    வேலூர் கோட்டையில் அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. கோட்டைக்கு வருபவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் இங்கு தரிசனத்துக்காக வருகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்புர விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 24-ம் ஆண்டாக வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது.

    அன்று முதல் வருகிற 1-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக 22-ந் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் உற்சவம் நடக்கிறது. பின்னர் 23-ந் தேதி காலை 6 மணிக்கு பிறகு கொடியேற்றம் நடக்கிறது. தொடந்து விழா நாட்களில் காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சியும், பஞ்ச மூர்த்திகள் அபிஷேகமும் நடக்கிறது.

    1-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரியும், காலை 10.25 மணிக்கு அம்பாள் அபிஷேகமும், வளையல் சாற்றுதல், அர்ச்சனை தீபாராதனையும் நடக்கிறது. இதேபோல கங்கா பாலார் ஈஸ்வரர் 22-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 3-ந் தேதி பஞ்சபூத மகாயாகம் நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளினாலேயே ஸ்ரீ கங்காபாலார் ஈஸ்வரருக்கு கலச அபிஷேகம் செய்கிறார்கள்.

    மேலும், இக்கோவிலில் வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் 26-ந் தேதி வரை ஒவ்வொரு வெள்ளியன்றும் ஆடி வெள்ளி விழா நடைபெறுகிறது. 6 வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபனத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×