search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்
    X

    திருப்பதி கோவிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

    • கைசிக துவாதசியும் சிறப்பு பெற்றது.
    • உக்ரசீனிவாசமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று கைசிக துவாதசி ஆஸ்தானம் நடந்தது. புராணங்களின்படி வைணவ ஷேத்திரங்களில் கடைப்பிடிக்கப்படும் மிக முக்கியமான நாட்களில் கைசிக துவாதசியும் ஒன்றாகும். வராகப்பெருமாள் கைசிக புராணத்தின் 82 ஸ்லோகங்களை பூதேவி தாயாருக்கு உபதேசித்த நாள் கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கைசிக துவாதசியும் சிறப்பு பெற்றது.

    கைசிக துவாதசி அன்று ஒருநாள் மட்டும் சூரிய உதயத்துக்கு முன் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வேங்கடத்துரைவர் என்று அழைக்கப்படும் உக்ரசீனிவாசமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார்.

    அதன்படி கைசிக துவாதசியான நேற்று அதிகாலை 4.30 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத உக்ரசீனிவாசமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    உற்சவர்களை கோவிலுக்குள் கொண்டு சென்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7 மணி வரை தங்கவாசலில் வைத்து சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு, பூரணை பட்டணம் கைசிக துவாதசி ஆஸ்தானத்தை அர்ச்சகர்கள் செய்தனர். அதில் கோவில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×