என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை கைலாசகிரி மலைக்கு கிரிவலம்
- கைலாசகிரி மலையை அடைந்ததும் அங்கு சிறப்புப்பூஜைகள் நடந்தது.
- உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 10-வது நாளான நேற்று காலை உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கைலாசகிரி மலைக்கு ஊர்வலமாக கிரிவலம் ெசன்றனர்.
திருக்கல்யாண உற்சவத்துக்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் சிவன்-பார்வதி கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடப்பதாக ஐதீகம்.
முன்னதாக கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் வெள்ளி அம்பாரிகளில் சாமி, அம்பாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க கிரிவலம் புறப்பட்டது.
கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக தொடங்கி கிருஷ்ணாரெட்டி மண்டபம், பேரிவாரி மண்டபம், வெலம மண்டபம் வழியாக 23 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் சென்றனர். வழிநெடுகிலும் ஆங்காங்ேக சாமி-அம்பாள் சிறிது நேரம் ஓய்வெடுத்து கிரிவலத்தைத் தொடர்ந்தனர். ஊர்வலத்துக்கு முன்னால் கலைஞர்கள் கோலாட்டம் ஆடினா். கேரள ெசண்டை மேளம் இசைக்கப்பட்டது. பக்தர்கள் சிவன், பார்வதி போல் வேடமிட்டு சென்றனர். பலர் 'அகோரி' வேடமணிந்து பங்கேற்றனர்.
சாமி-அம்பாள் கைலாசகிரி மலையை அடைந்ததும் அங்கு சிறப்புப்பூஜைகள் நடந்தது. அங்கிருந்து சாமி-அம்பாள் புறப்பட்டு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலை அடைந்தனர். கிரிவலத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி 80-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கைலாசகிரி மலைக்கு கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்