search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காஞ்சீபுரம் சித்ரகுப்தர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் குவிந்தனர்
    X

    காஞ்சீபுரம் சித்ரகுப்தர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் குவிந்தனர்

    • புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் கோபுரம் மீது ஊற்றப்பட்டது.
    • காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் பிரசித்தி பெற்ற சித்ரகுப்தர் சுவாமி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக இது விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று காலை விமரிசையாக நடை பெற்றது. புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் கோபுரம் மீது ஊற்றப்பட்டது. இதில் காஞ்சீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்ட னர். இதனால் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    சித்ரகுப்தர்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி காஞ்சீபுரத்தில் போக்கு வரத்து மாற்றம் செய்யப் பட்டு இருந்தது. காஞ்சீபுரம் நெல்லுக்காரத் தெருவில் வாகனங்கள் செல்வதை தடுக்க காஞ்சீபுரம் டவுன் பேங்க் சந்திப்பு மற்றும் இரட்டை மண்டபம் சந்திப்பு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல் காஞ்சீபுரம் டவுன் பேங்க் வழியாக இரட்டை மண்டபம் நோக்கி வரும் வாகனங்கள் பூக்கடைச் சத்திரம் மற்றும் அரசு ஆஸ்பத்திரி சாலை வழியாக திருப்பி விடப் பட்டன. இரட்டை மண்டபம் வழியாக டவுன் பேங்க் நோக்கி செல்லும் வாக னங்கள் பஸ் நிலையம் வழியாக சென்றன.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தலை மையில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகர் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×