என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
கூடல் அழகர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் தரிசனம்
- இன்று மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
- 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
108 வைணவ திவ்ய தேச தலங்களில் 47-வது தலமாக மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவில் விளங்குகிறது.
இக்கோவில் அருகே பெரியார் பஸ் நிலையம் அமைந்திருப்பதால், உள்ளூர், வெளியூர் என ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.
இக்கோவிலில் வைகாசி பெருந்திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. 8-ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் வீதிஉலா வந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தெற்குமாசி வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சிறப்பு பூைஜகள் நடைபெற்றன. கோவிந்தா கோஷங்கள் முழங்க காலை 6.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசித்தனர்.
தேரடியில் இருந்து கிளம்பிய தேர் பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக வந்து, காலை 9 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேரோடும் பாதையில் பக்தர்களுக்கு ஏராளமானோர் நீர்மோர், அன்னதானம் வழங்கினார்கள். நேற்று இரவு தங்க சிவிகையில் பெருமாள் எழுந்தருளி காட்சி அளித்தார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (5-ந்தேதி) கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் பெருமாள் அன்று இரவு வைகை ஆற்றங்கரையில் உள்ள ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அதனை தொடர்ந்து விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 6-ந்தேதி கருட வாகனத்தில் புறப்படும் பெருமாள் வெங்கலக்கடை தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சத்திரத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் பெருமாள் கோவிலை வந்தடைகிறார். 8-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்