search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா தொடங்கியது
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா தொடங்கியது

    • சுந்தரேசுவரருக்கு 4-ந்தேதி பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • 9-ந்தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை.

    சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுந்தரேசுவரருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.

    அவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி நேற்று காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

    பின்னர் கொடிமரம் மற்றும் அங்கு எழுந்தருளிய சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இறைவனின் லீலைகளை எடுத்துக்கூறும் வகையிலான முக்கிய விழாக்கள் 29-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது.

    4-ந் தேதி காலையில் வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது. 5-ந் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 6-ந் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலையும், 7-ந் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளன.

    8-ந் தேதி சட்டத்தேர் வீதி உலா நடக்கிறது. இரவு சப்தாவர்ண சப்பரத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 9-ந் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×