search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வினைதீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி
    X

    வினைதீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தி

    • குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
    • சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர்.

    இன்று மஹாசங்கடஹர சதுர்த்தி. விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தி மஹாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபீட்சம் பெருகும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். கேது தோஷம், சந்திர தோஷம் நீங்கும்.

    சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய அருள் வளர்ந்தது. சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது அழிப்பது என்று பொருள். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் சங்கடங்கள் நீங்கும்.

    நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர் சந்திரன் பகவான். சந்திரன் மனோகாரகன். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கும் காரகன் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் சுப பலன்களையும், தேய்பிறை சந்திரன் பாதக பலன்களையும் தருகிறது. சந்திரனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கவும், கேது தோஷம் நீங்கவும் விநாயகரை வழிபடலாம்.

    விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களை போக்க கூடியவர். சந்திர பகவானும் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளை தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபடுகிறோம்.

    "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலெளம் கம் தோரண

    கணபதயே சர்வகார்ய கர்த்தாய ஸகல

    சித்திகராய ஸர்வஜன வசீகரணாய

    ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம்

    கணபதயே ஸ்வாஹா."

    இந்த கணபதி மந்திரத்தை சங்கடஹர சதுர்த்தி முடிவதற்குள், அதாவது, காலை முதல் மாலைக்குள் ஒரு முறையாவது சொல்ல வேண்டும். முடிந்தவர்கள் காலை, மாலை இருவேளையும் சொல்வது சிறப்பானதாகும். சுப காரியங்கள், மங்கள நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள், புதிய ஆடைகள் வாங்குவது, புதிய தொழில் தொடங்குவது என எந்த சுப காரியம் தொடங்குவதாக இருந்தாலும் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று தொடங்கலாம். அப்படி செய்வதால் வீட்டில் தொடர்ந்து சுபகாரியங்கள் நிகழும்.

    Next Story
    ×