என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
முருகனின் வடிவமும்.... வழிபாட்டு பலன்களும்!
பாலசுவாமி
திருச்செந்தூர், ஆண்டாள்குப்பம், திருக்கண்டியூர் ஆகிய ஆலயங்களில் பாலசுவாமி திருவுருவத்தைத் தரிசிக்கலாம், இவர், உடல் குறைபாடுகளை அகற்றும் சக்தி கொண்டவர் என்று நம்பப்படுகிறது. இவரை வழிபடுபவர்களுக்கு சிறந்த உடல்நலம் கிடைக்கும்.
தேவசேனாதிபதி
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்த முருகப்பெருமான் கோவிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில், இந்தத் திருவடிவைக் காணலாம். இவரை வழி பட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.
பிரம்ம சாஸ்தா
காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்ம சாஸ்தா திருக்கோலம் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா வகையான வித்தைகளும், கைவரப் பெறும். சகலவிதமான கலை அறிவும் கைகூடும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
கந்தசுவாமி
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலை, பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் இதுவாகும். இவரை வழிபாடு செய்தால், சகல காரியங்களும் சித்தியாகும்.
கஜவாகனர்
யானை மீதோ, யானையை அருகிலோ வைத்தபடி அருளும் முருகப்பெருமானை 'கஜவாகனர்' என்பார்கள். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகிய இடங்களில் இந்த வடிவத்தை காணலாம். இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.
கிரவுஞ்சபேதனர்
திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் காணப்படுகிறது. இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.
கார்த்திகேயா
கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில், இவரது திருவுருவம் உண்டு. இவரை வழிபாடு செய்து வந்தால், சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும்.
குமாரர்
நாகர்கோவில் அருகில் சிறிய குன்றின் மீது இருக்கும் குமாரக்கோவிலில் இவரது திருவடிவம் இருக்கிறது. அதேபோல் கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்கு பஞ்சலோக விக்கிரகம் உள்ளது. இவரை வழி பட்டால் ஆணவம் அடியோடு நீங்கும்.
சேனானி
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது. இவரை வழி பட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை விலகும்.
சரவணபவர்
சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது. தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.
சக்திதரர்
திருத்தணிகையில் எழுந்தருளி இருக்கும் மூலவர் திருவடிவம், ஞான சக்திதார் திருக்கோலமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.
சிகி வாகனர்
மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம் ஆகும். மயில் மீது வீற்றிருக்கும் இந்த முருகனை வழிபட்டால் இன்ப வாழ்வு அமையும்.
சுப்பிரமணியர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழி முருகன் கோவில் மூலவர், சுப்பிரமணியர் திருவடிவம் ஆகும். இவர், தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்த பெருவாழ்வை அளிக்கக்கூடியவர்.
வள்ளி கல்யாண சுந்தரர்
திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருமேனி இருக்கிறது. இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப்பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும்.
தாரகாரி
ஹதாரகாசுரன் என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமானுக்கு இந்த திருப்பெயர் ஏற்பட்டது. உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில், இந்த தாரகாரி முருகன் அருள்பாலிக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்