என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Byமாலை மலர்20 Jun 2022 9:44 AM IST
- ஆஞ்சநேயருக்கு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினந்தோறும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
Next Story
×