என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரம்
- பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க மேற்கூரையும் பொருத்தப்பட்டுள்ளன.
- சுவாமி தரிசனத்துக்கு இலவச கட்டண முறையில் அனுமதி உண்டு.
நாமக்கலில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சுவாமி கோயில் உள்ளது .குடைவறை கோயிலான இந்த கோவிலில் உள்ள சுவாமி ஸ்ரீரங்கத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டில் ஜனவரி 2-ந் தேதி நடைபெறும் ஏகாதசி விழாவை ஒட்டி அதிகாலை 4:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பக்தர்கள் நெரிசலின்றி செல்லவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வசதியாக கோவிலுக்கு முன்பகுதியில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க மேற்கூரையும் பொருத்தப்பட்டுள்ளன. சுவாமி தரிசனத்துக்கு இலவச கட்டண முறையில் அனுமதி உண்டு. மேலும் பக்தர்கள் தடுப்புகள் வழியாக செல்லாமல் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு பாதையின் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வைகுண்ட ஏகாதசி நாள் அன்று கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.