என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
பாபநாசம் கோவிலில் தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- சாமி, அம்பாள் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெற்றது.
- சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பாபநாசம் உலகாம்பிகை அம்மன் உடனுறை பாபநாச சாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சாமி, அம்பாள் வீதி உலா நடந்தது.
ஒன்பதாம் திருநாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. பத்தாம் திருநாளான நேற்று சித்திரை விசுவை முன்னிட்டு சாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமி, அம்பாள் பூ பல்லக்கில் வீதி உலா வந்தனர்.
பகல் ஒரு மணிக்கு கோவில் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
அதிகாலை சாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெற்றது.
சித்திரை விசு சிறப்பு ஆராதனை, தீர்த்தவாரி, தெப்பத் திருவிழா மற்றும் திருமணக் கோலத்தில் அகஸ்தியருக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொடடி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.