search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சதுரகிரி கோவிலுக்கு செல்ல வருகிற 12-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி
    X

    சதுரகிரி கோவிலுக்கு செல்ல வருகிற 12-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி

    • மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்.
    • காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி 14-ந் தேதி வைகாசி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும்.

    மேற்கண்ட நான்கு நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தால் அன்றைய தினம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது, இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    பவுர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கத்துக்கு மேற்கண்ட 4 நாட்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    Next Story
    ×