search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி அந்தோணியார் தேர்பவனி நடக்கிறது.

    சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான இன்று மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை அகஸ்டின் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்தந்தை ஜெயா சுந்தர்சிங் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு திருப்பலி, பகல் 12 மணிக்கு அன்பு விருந்து, வருகிற 1-ந்தேதி அனைத்து கல்லூரி சார்பில் திருப்பலி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. 5-ந்தேதி மாலை 6 மணிக்கு மூளகுமுடு பங்குதந்தை டோமினிக் எம்.கடாட்சதாஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    6-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலையில் நடைபெறும் மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசு ரத்தினம் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு அந்தோணியார் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 7-ந்தேதி காலை 9 மணிக்கு புனித பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா ஆகியவை நடைபெறுகிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிறிம்மஸ்சிங், பங்கு பேரவை உதவித்தலைவர் மைக்கேல் ராஜன், பொருளாளர் ஏசுராஜன், செயலாளர் சபிதா ப்ரித்தி, உதவிச்செயலாளர் டென்னிஸ் ராஜ் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பக்த சபைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×