என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
நிலக்கோட்டை அருகே புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- ஒவ்வொரு நாளும் ஜெபமாலை நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறும்.
- வருகிற 1-ந்தேதி கூட்டுத்திருப்பலி, மின்னொளி ரத தேர்பவனி நடைபெறுகிறது.
நிலக்கோட்டை அருகே மிக்கேல்பாளையத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 23-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் அருட்தந்தை செபாஸ்டின் அல்வராஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை சேவியர் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மாலையில் ஜெபமாலை நிகழ்ச்சியும், திருப்பலியும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி இரவு 7 மணிக்கு கூட்டுத்திருப்பலி, வாணவேடிக்கை, மின்னொளி ரத தேர்பவனி நடைபெறுகிறது. 2-ந்தேதி திருப்பலி, தேர்பவனி, நற்கருணை ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புனித மிக்கேல் ஆலய நிர்வாக குழுவினர், அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், பங்கு அமைப்புகள், பங்கு இறைமக்கள் உள்பட பலர் செய்து வருகின்றனர்.