என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் தைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
- விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
- 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், திருநடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்து பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெற்றது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைத்தார்.
குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ்,பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்திருந்தனர்.
தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது.
வருகிற 27-ந்தேதி மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சாஸ்த்தான் கோவில்விளை, செட்டிவிளை உட்பட பல சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அதனை தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.
30-ந் தேதி (திங்கட்கிழ மை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்