search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருநறையூர் ராமநாதசுவாமி கோவிலில் குடமுழுக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது
    X

    திருநறையூர் ராமநாதசுவாமி கோவிலில் குடமுழுக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது

    • வருகிற 24-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது.
    • நாளை முதல் கால யாக பூஜை தொடங்கி 24-ந்தேதி அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    கும்பகோணம் அருகே உள்ள திருநறையூரில் ராமநாதசாமி கோவில் உள்ளது. தசரத மன்னன் வழிபட்ட தலமான இங்கு சனி பகவான் மந்தாதேவி ஜேஸ்ட்டா தேவி சமேதராய் காட்சியளிக்கிறார். இங்கு கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 24-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது.

    விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நாளை(புதன்கிழமை) முதல் கால யாக பூஜை தொடங்கி வருகிற 24-ந்தேதி அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை 6.50 மணிக்கு விமான குடமுழுக்கும், தொடர்ந்து மூலவர்கள் குடமுழுக்கும் நடைபெறுகிறது.

    இரவு 7 மணிக்கு சுவாமிகள் வீதி உலா நடக்கிறது. சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் மனோஜ், ஞானசேகர் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பிரபாகரன், தக்கார் அருணா மற்றும் கோவில் பணியாளர்கள், திருநறையூர் மக்கள் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×