என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் ஆடிப்பூர தேரோட்டம்
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்றது.
மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் பிரசித்திபெற்ற நீலிவனநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரால் தேவாரபாடல் பெற்றது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும், சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காலை 6.10 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து மதியம் 3.10 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தேர், தேரோடும் வீதி வழியாக வலம் வந்து மாலை 5.10 மணிக்கு நிலையை அடைந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவிஆணையர் லட்சுமணன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர். மண்ணச்சநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.