என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழா தொடங்கியது
- இத்திருவிழா 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- 2-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி வசந்த திருவிழா நேற்று தொடங்கியது. இத்திருவிழா வருகிற 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் வசந்த மண்டத்திற்கு எழுந்தருளினார்.
அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகியது. பின்னர் சுவாமி வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் 11 முறை சுற்றி வலம் வந்தார் வந்தார். பின்னர் சுவாமிக்கு அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். வசந்த திருவிழா நிறைவு நாளான 10-ம் நாள் ஜூன் 2-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது.