search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச, சர்வ பூபால வாகனங்களில் கோதண்டராமர் உலா
    X

    கல்ப விருட்ச வாகனத்தில் சீதாதேவி, லட்சுமணர், கோதண்டராமர் அருள்பாலித்த காட்சி.

    பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கல்ப விருட்ச, சர்வ பூபால வாகனங்களில் கோதண்டராமர் உலா

    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று கருட சேவை நடக்கிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் கோதண்ட ராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை மடாதிபதிகளான பெரிய ஜீயர், சின்ன ஜீயர், கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன், கங்கணப்பட்டர் ஆனந்தகுமார் தீட்சிதர், கோவில் கண்காணிப்பாளர் ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ், சலபதி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை பல்லக்கில் கோதண்டராமர் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். இரவு சிகர நிகழ்ச்சியாக கருட வாகனத்தில் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    Next Story
    ×