search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றம்
    X

    உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் ஆனி மாத தேர் திருவிழா கொடியேற்றம்

    • 23-ந் தேதி கலி வேட்டை நடக்கிறது.
    • 26-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா நேற்று தொடங்கியது.

    இதனையொட்டி நேற்று திருக்கொடியேற்றம் நடந்தது. இந்த விழா 26-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. தினமும் பணிவிடையும், உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், அன்னதர்மமும், அய்யா வாகனத்தில் பவனி வருதல், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    18-ந் தேதி காலை 9 மணிக்கு கோலப்போட்டி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோலப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தொழில் அதிபர் கே.ராஜலிங்கம் பரிசு வழங்குகிறார்.

    23-ந் தேதி மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.

    26-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், நண்பகல் 1 மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 3 மணிக்கு ஆஞ்சநேயர் திருத்தேர் முன்னே செல்ல, டாக்டர் எஸ்.லெட்சுமணனால் தொடங்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது கோவில்விளை சந்திப்பில் அன்னதர்மமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தேர் கோவில் முன் வந்து சேரும். அதைத்தொடர்ந்து அன்னதர்மமும், வாண வேடிக்கையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 2 மணிக்கு கொடியிறக்கமும், இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.

    திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் எம்.தங்ககிருஷ்ணன், உப தலைவர் ஏ.சந்திரசேகர், செயலாளர் பி.துரைச்சாமி, இணைச்செயலாளர் ஆர்.சிவசுப்பிரமணியன், பொருளாளர் கே.உதயகுமார், துணைப்பொருளாளர் பி.ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் இ.கிருஷ்ணமணி, எஸ்.நாராயணபெருமாள், ஜி.மணிகண்டன், எஸ்.ஸ்ரீதர், எஸ்.நாராயணமணி, ஆர்.ராஜேஸ்வரன், ஆர்.சுரேந்திரன், டி.தங்கலிங்கம் மற்றும் ஊர் மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×