என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
வாடிப்பட்டியில் வைகாசி விசாக திருவிழா: பூப்பல்லக்கில் முருகப்பெருமான் வீதிஉலா
- பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
- விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.
வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை தர்மராஜன் கோட்டையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் அலகு குத்தி பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கி பாதயாத்திரையாக சென்று பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
திருவிழாவையொட்டி பல்லக்கில் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு வல்லபகணபதி கோவிலில் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து பல்லக்கில் சுவாமி புறப்பட்டு வாடிப்பட்டி நகர் முழுவதும் முக்கியவீதிகளில் பல திருக்கண்களை அடைந்து தாதம்பட்டி, நீரேத்தான், பேட்டைபுதுார், போடிநாயக்கன்பட்டி, ராமநாயக்கன்பட்டி, வாடிப்பட்டி, ரெயில்நிலையம், சொக்கையாசுவாமிகள் மடம் வழியாக மறுநாள் மதியம் 12 மணிக்கு கோவிலை வந்து அடைந்தது. விடிய, விடிய பல்லக்கில் வந்த முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்தனர்.