என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
எமனேசுவரம் வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி வசந்த உற்சவம்
- வரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
- திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோசமிட்டு கள்ளழகரை வரவேற்றனர்.
பரமக்குடி பகுதி எமனேசுவரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான வரதராஜப் பெருமாள் கோவிலில் 221-வது பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 30-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், 1-ந் தேதி தேரோட்டமும், 2-ந் தேதி இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.
இதையடுத்து வைகாசி பவுர்ணமி வசந்த உற்சவ விழா தொடங்கியது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோசமிட்டு கள்ளழகரை வரவேற்றனர்.
பின்பு காலை 10 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி அனுமார் கோதண்ட ராமசாமி கோவில், பெரிய கடை பஜார், வழியாக சுந்தரராஜப் பெருமாள் கோவில் முன்பு வந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை வைகை ஆற்றில் சப்பரத்தில் அமர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு வண்டியூர் மண்டகப் படியை வந்தடைந்தார். திருவிழா ஏற்பாடுகளை எமனேசுவரம் சவுராஷ்ட்ரா சபை நிர்வாகிகள் செய்தனர்.