search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்
    X

    வாஸ்து மூலை வடக்கு பார்த்த வீட்டை எவ்வாறு அமைக்கலாம்

    பீரோவை கன்னி மூலையில் வைப்பது சாலச்சிறந்தது. இது செல்வ செழிப்புக்கு உதவும்.

    * ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் படிப்பிற்கும் சிறப்பைக் கூட்டும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும்.

    * தென் மேற்கில் படுக்கை அறை அமைக்கலாம். கட்டிலை தெற்குப் பகுதியில் உள்ள சுவரை ஒட்டி போடலாம். அவ்வாறு வைக்கும் பொழுது பணம் புழங்கும். பீரோவை கன்னி மூலையில் வைப்பது சாலச்சிறந்தது. இது செல்வ செழிப்புக்கு உதவும்.

    * உறவுகள் பலமாக அமைய வேண்டுமென்றால் உறவினர்கள் வந்து தங்கக் கூடிய இடம் வடமேற்கில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். வீட்டில் உள்ள முதியவர்கள் வடமேற்கில் உள்ள படுக்கை அறையில் தங்குவது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * நாம் உண்ணும் உணவே நம் உடல் ஆரோக்கியத்திற்கும், அமைதியான மனதிற்கும் காரணமாக அமைகிறது. அப்படிப்பட்ட உணவை சமைக்கும் இடம் அக்னி மூலை எனப்படும் தென்கிழக்குப் பகுதியில் இருக்க வேண்டும். சமையலறை சிறப்பாக அமைந்தால் மட்டுமே பெண்கள் அங்கு உணவை சுவைபட சமைக்க முடியும்.

    Next Story
    ×