search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 8-ந்தேதி நடக்கிறது
    X

    உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் 8-ந்தேதி நடக்கிறது

    • 6-ந்தேதி இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.
    • அபிஷேகமும், சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தானம் மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இக்ேகாவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) காலை 9.15 மணி முதல் விக்னேசுவர பூஜையும் கணபதி ஹோமமும் வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற உள்ளது. பின்னர் மாலை மிருத்சங்கிரஹணஙம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் கலாகா்ஷணமும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து இரவு முதற்கால யாக பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெறும். மறுநாள் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 7-ந் தேதி காலை நான்காம் கால யாக பூஜையும் மாலை ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து, 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை ஆறாம் கால யாக பூஜையும் கோ பூஜையும் நடைபெற்று காலை 10.45-க்கு மேல் 11.45-க்கும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மேலும் மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். அபிஷேகமும், சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×