search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மசாக் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், ஜோகோவிச் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்,

    • துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது.
    • இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற சானியா முடிவு செய்துள்ளார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் இணைந்து பங்கேற்கிறார்.


    இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ள சானியா, இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா ஜோடியை இன்று எதிர்கொள்கிறார்.

    • காலிறுதியில் ஹாங்காங்கை வென்ற இந்தியா அரையிறுதியில் நுழைந்தது.
    • சீனா அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்தது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

    எச்.எஸ்.பிரனோய் தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியது.

    அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை வென்றது. பெண்கள் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி சீனாவை வென்றது. இதனால் இந்தியா 2-2 என சமனிலை வகித்தது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் இஷான் பட்நாகர், டனிஷா கிராஸ்டோ ஜோடியை சீன ஜோடி வென்று, 3-2 என்ற கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது.

    • கஜகஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியாவை வீழ்த்தியது இந்தியா வென்றது.
    • நேற்று நடந்த காலிறுதியில் ஹாங்காங்கை வென்ற இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

    லக்ஷயா சென் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியது.

    அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி 20-22, 21-16, 21-11 என்ற கணக்கில் ஹாங்காங் ஜோடியை வென்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 16-21 21-7 21-9 என்ற கணக்கில் வென்றார்..

    பெண்கள் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-13, 21-12 என்ற கணக்கில் வென்றது. இதனால் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானை இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமிரேட்சையும் வீழ்த்தியது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும் 5-0 என்ற கேம் கணக்கில் வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று 3-வது ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

    எச். எஸ்.பிரனோய் 18-21 21-13 25-23 என்ற கணக்கில் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து 21-13 21-17 என்ற கணக்கில் வென்றார்..

    அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 16-21 10-21 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றது. பெண்கள் இரட்டையரில் 23-21, 21-15 என்ற கணக்கில் வென்றார். இதனால் இந்தியா 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு 2 இந்திய வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
    • இதில் ஷுப்மன் கில் ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதை வென்றார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.

    கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்கான 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகினர்.

    அதன்படி, சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகினர்.

    இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷுப்மன் கில் வென்றார்.

    ஷுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார். கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்தார்.

    இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் வென்றார்.

    • ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு 2 இந்திய வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
    • நியூசிலாந்தின் டேவான் கான்வேயும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.

    ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் சுப்மன் கில், மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

    டேவான் கான்வே கடந்த மாதத்தில் 3 சதம், 2 அரைசதம் அடித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர் இந்தியாவுக்கு எதிராகவும் மிகச்சிறப்பாக ஆடினார். அதன் மூலம் அவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார். 23 வயதான ஷுப்மன் கில் கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்ததோடு மட்டுமின்றி, இந்த பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

    ஜஸ்பிரித் பும்ரா இல்லாத காரணத்தினால் இந்திய அணியின் பந்துவீச்சின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ளார் சிராஜ். கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அபார பந்து வீச்சை வெளிப்படுத்திய இவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பந்துவீச்சாளராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • அபுதாபி ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவு முதல் சுற்று நேற்று நடந்தது.
    • இதில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    துபாய்:

    அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது.

    இதில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மெட்டக் சாண்டஸ் ஜோடி, பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிலிப்கன்ஸ், ஜெர்மனியின் லாரா செக்மண்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் சானியா மிர்சா ஜோடி 3-6,4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

    • 2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் ஆடவர் அணி அறிவிக்கப்பட்டது.
    • இந்த அணியில் 2 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஐசிசி வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.

    அந்த வகையில் ஐசிசி நேற்று முன்தினம் 2022-ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணி மற்றும் பெண்கள் டி20 அணியை அறிவித்தது.

    இந்நிலையில், 2022-ம் ஆண்டுக்கான ஒருநாள் ஆடவர் அணியை ஐசிசி நேற்று அறிவித்தது. இந்த அணிக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இந்திய அணியில் இருந்து ஒரு பேட்ஸ்மேன், ஒரு பந்துவீச்சாளர் என இரு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமும், ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 3-வது இடத்துக்கு வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப்பும், 4-வது இடத்துக்கு இந்திய வீரர் ஸ்ரேயஸ் அய்யரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து 5-வது இடத்தில் நியூசிலாந்தின் விக்கெட் கீப்பட் பேட்ஸ்மேன் டாம் லதாமும், ஆல் ரவுண்டர்களாக 6-வது மற்றும் 7-வது இடத்தில் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசாவும், வங்கதேசத்தின் மஹதி ஹசன் மிராசும் உள்ளனர்.

    இதையடுத்து, பந்துவீச்சாளர்களாக 7 முதல் 11 இடங்களுக்கு அல்ஜாரி ஜோசப் (வெஸ்ட் இண்டீஸ்), முகமது சிராஜ் (இந்தியா), டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.
    • ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டியில் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 2 சதம் உள்பட 283 ரன்கள் விராட் கோலி குவித்தார். இதனால் அவர் 4வது இடத்துக்கு முன்னேறினார்.

    பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ரஸ்ஸி வான் டெர் டசன் (தென் ஆப்பிரிக்கா ) 3வது இடத்தில் டி காக் (தென் ஆப்பிரிக்கா ) உள்ளனர். இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 10-வது இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டிரெண்ட் போல்ட் முதல் இடத்திலும், ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) 2வது இடத்திலும், இந்திய வீரர் சிராஜ் 3வது இடத்திலும் உள்ளனர்.

    ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) முதல் இடத்திலும், முகமது நபி (ஆப்கானிஸ்தான்) 2 வது இடத்திலும், மெஹதி ஹசன் (வங்காளதேசம்) 3வது இடத்திலும் உள்ளனர்.

    • டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்தது.
    • சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்.

    துபாய்:

    ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது.

    இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரில் ஹாரி புரூக் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி 3 சதம் மற்றும் 1 அரைசதம் குவித்து அசத்தினார்.

    2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக் ஐதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார்.

    • ஆஸ்திரேலியா வீரர் லபுஸ்சேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்.
    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2-வது இடத்தில் உள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்சேன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.

    ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் 87 மற்றும் 29 ரன் வீதம் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 10 இடங்கள் எகிறி 16-வது இடத்தை பிடித்துள்ளார். புஜரா 19-வது இடத்தையும், விராட் கோலி 14-வது இடத்தையும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஒரு இடம் முன்னேறி சக வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடன் 4-வது இடத்தை பகிர்ந்துள்ளார். 

    ×