search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது.

    பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா 3வது இடத்திலும் உள்ளனர்.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 4வது இடத்திலும், பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி 5வது இடத்தில் உள்ளனர்.

    இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா 8வது இடத்திலும், முகமது ஷமி 10வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

    • துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் மேன்ஷன் என்ற அந்த ஓட்டலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களை தொகுத்து வழங்கி உள்ளார்.
    • துபாயின் பரந்த நிலப்பரப்பை மொட்டை மாடியில் நின்று பார்க்கும் வசதி, தியேட்டர், நூலகம், பார், விளையாட்டு அறை என பல்வேறு வசதிகள் அதில் உள்ளது.

    சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களில் ஒருவர் அலன்னா பாண்டே. இந்தி நடிகை அனன்யா பாண்டேவின் உறவினரான இவருக்கு சமூக ஊடகங்களில் ஏராளமான பாலோயர்கள் உள்ளனர்.

    இந்நிலையில் அலன்னா பாண்டே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ஆடம்பர ஓட்டல் தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் மேன்ஷன் என்ற அந்த ஓட்டலில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்களை தொகுத்து வழங்கி உள்ளார். அதிநவீன 2 நிலைகள் கொண்ட 4 படுக்கை அறைகள் மற்றும் 12 இருக்கைகள் கொண்ட சாப்பாட்டு அறை, பொழுதுபோக்கு அறை, நீச்சல் குளம் மற்றும் துபாயின் பரந்த நிலப்பரப்பை மொட்டை மாடியில் நின்று பார்க்கும் வசதி, தியேட்டர், நூலகம், பார், விளையாட்டு அறை என பல்வேறு வசதிகள் அதில் உள்ளது.

    வீடியோவுடன் அலன்னா பாண்டேவின் பதிவில், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஓட்டல் தொகுப்பின் சுற்றுப்பயணம் இது. இங்கு ஒரு நாள் இரவு தங்குவதற்கு வாடகை 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.83 லட்சம்) ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டி பேட்மேன்ஸ்கள் தரவரிசைப் பட்டியல் வெளியானது.
    • இதில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி காக் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.

    • அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.
    • துபாயின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

    துபாய்:

    துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொது போக்குவரத்து தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 14-வது ஆண்டாக கடந்த 1-ந்தேதி 'உங்கள் வழியில் விளையாட்டுக்கள்' என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்டது.

    இதே நாளில் சாலை மற்றும் போக்குவரத்து தொடங்கிய 18-வது ஆண்டு விழா கொண்டாட்டமும் நடந்தது. துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம், படகு, டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல முடிகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது போக்குவரத்து தினத்துக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கார்பன் உமிழ்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புகள் குறைய உதவியாக இருக்கிறது. மேலும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் பொது போக்குவரத்து சேவையை அதிக முறை பயன்படுத்திய தலா 3 பேர் பரிசுகள் வழங்கி கவுரவிக்க தேர்வு செய்யப்பட்டனர்.

    மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 8 ஆயிரம் முறை பயணம் செய்த டெர்ரன் பாடியா முதல் பரிசையும், 7 ஆயிரம் முறை பயணம் செய்த சலேம் அல் சமகி 2-ம் இடத்தையும், 6 ஆயிரத்து 750 முறை பயணம் செய்த முகம்மது அப்தெல் காதர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    பொது பிரிவில் 15 ஆயிரத்து 900 முறை பயணம் செய்த முகம்மது அபுபக்கர் முதல் பரிசையும், 14 ஆயிரத்து 422 முறை பயணம் செய்த முகம்மது அகமது ஜதா 2-ம் பரிசையும், 13 ஆயிரத்து 900 முறை பயணம் செய்த சிராஜ் அல் தின் அப்தெல் காதர் 3-வது பரிசையும் பெற்றனர். முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10 லட்சம் நோல் பாய்ண்டுகளும், 2-வது பரிசு பெற்றவர்களுக்கு 7 லட்சம் நோல் பாய்ண்டுகளும், 3-வது பரிசு பெற்றவர்களுக்கு 5 லட்சம் நோல் பாய்ண்டுகளும் வழங்கப்பட்டது.

    அவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் வகையில் நோல் பாய்ண்டுகள் வழங்கப்பட்டது. அவர்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் ஹீரோக்கள் என அழைக்கப்பட்டனர்.

    பரிசுகளை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    துபாயில் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பொது போக்குவரத்து சேவையை எளிதில் பயன்படுத்தும் வகையில் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    துபாயின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கார்பன் உமிழ்தலை தடுக்கவும் உறுதுணையாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது ஐசிசி.
    • செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்தியாவின் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    துபாய்:

    ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ஐ.சி.சி. அறிவித்தது.

    இந்தப் பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில், முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து வீரரான டேவிட் மலான் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்நிலையில், சிராஜ் மற்றும் மலானைப் பின்னுக்குத் தள்ளி செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். சுப்மன் கில் செப்டம்பர் மாதம் மட்டும் 80 சராசரியுடன் 480 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதேபோல, செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இலங்கை அணி கேப்டன் சமாரி அடப்பட்டு தேர்வு செய்யப்பட்டார்.

    • கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
    • இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

    அபுதாபி:

    அபுதாபியில், இந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் திறக்கப்படுகிறது.

    அமீரகத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் முறையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக வருகை புரிந்தார். அப்போது மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க அமீரகத்தில் வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக அபுதாபியில் இந்து கோவில் கட்டுவதற்கு அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அந்த கோவிலை கட்டுவதற்கு துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் அபுதாபி அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது.

    இதற்கான உத்தரவை அப்போதைய அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பிறப்பித்தார். இந்த கோவிலின் கட்டுமான பணிகளை நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பாப்ஸ் (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற இந்து அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து பாப்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- அரசின் இந்த அனுமதியை தொடர்ந்து கோவிலின் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்படுகிறது. இந்து கோவிலின் கட்டுமான பணிகளில் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என அமீரகத்தில் வசிக்கும் இந்திய மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலரும் கற்களை கட்டுமான தளத்திற்கு எடுத்து செல்கின்றனர்.

    இரும்பு கம்பிகள் எதுவும் இல்லாமல் பாரம்பரிய இந்து கோவிலாக கட்டப்படுவது இதன் சிறப்பம்சமாகும். கட்டிட உறுதிக்காக சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் ௭ கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்று முதல் தளத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.

    கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்படுகிறது. பூக்கள் மற்றும் கொடிகள் போன்ற வேலைபாடுகளுடன் இந்த சிற்ப கற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகள் வைப்பதற்கு தேவையான இடைவெளி விட்டு கட்டப்படுகிறது.

    இதில் ராமரின் வாழ்க்கை வரலாறு குறித்த சம்பவங்களை விளக்கும் வகையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை அந்த கோவில் வளாகம் முழுவதும் பதிக்கப்பட உள்ளன. இந்த கோவிலின் ஆயுட்காலம் குறைந்தபட்சம் 1,000 ஆண்டுகளாக இருக்கும் வகையில் கட்டப்படுகிறது. இதற்காக கட்டுமான பகுதியில் மேற்கு ராஜஸ்தானில் இருந்து 70 சிற்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணியாற்றுகின்றனர்.

    இதில் மிகப்பெரிய கலையரங்கம், கண்காட்சி அரங்கம், நூலகம், உணவகங்கள், கூட்டங்கள் நடத்தும் பகுதி மற்றும் 5 ஆயிரம் பேர் நிகழ்ச்சிகளை ஒரே நேரத்தில் பார்வையிடும் வசதியுடன் 2 சமூக அரங்குகளுடன் கட்டமைக்கப்படுகிறது. கூடுதலாக வளாகத்தின் அருகே 53 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கார் நிறுத்தப்பகுதி அமைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 1,200 கார்கள் மற்றும் 30 பஸ்கள் ஒரே நேரத்தில் நிறுத்திக்கொள்ளலாம். கூடுதலாக ஹெலிகாப்டர் இறங்குவதற்கு வசதியாக 2 தளங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த கோவிலின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் முழுமையான செயல்பாட்டுக்கு வந்ததும் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2024, ஜூன் 4 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது.
    • டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது.

    துபாய்:

    டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை இப்போட்டியை இணைந்து நடத்துகின்றன.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 4-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி அறிவித்துள்ளது.

    மேற்கிந்திய தீவுகளில் ஆன்டிகுவா-பார்புடா, பார்படாஸ், கயானா, செயின் ட் லூசியா, செயின் ட் வின் சென் ட், டிரினிடாட்-டுபாகோ ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    இதேபோல் அமெரிக்காவின் டல்லாஸ், புளோரிடா மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

    • ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
    • இந்திய அணி 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது.

    துபாய்:

    இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் முடிவடைந்தன.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

    அதில், பாகிஸ்தான் அணி மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்திற்கு சரிந்தது. அந்த அணி உலக கோப்பை தொடருக்கு முன் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேற இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்ற வேண்டும்.

    இந்திய அணி தற்போது தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது.

    வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றினால் உலக கோப்பை தொடரில் இந்திய அணி நம்பர் 1 அணியாக வலம் வரும்.

    • சாந்திநிகேதனுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
    • யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டு உள்ளது.

    ரியாத்:

    மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் கடந்த 1901-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சாந்திநிகேதன். உறைவிட பள்ளி, பழமையான இந்திய பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட கலைக்கான ஒரு மையம் ஆகவும் இது திகழ்கிறது.

    1921-ம் ஆண்டு சாந்திநிகேதனில் உலக பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டது. மனித இனத்திற்கான ஒற்றுமை அல்லது விஸ்வ பாரதியை அங்கீகரிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

    இந்த கலாசார தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்காக நீண்டகாலம் வரை இந்தியா போராடி வந்தது.

    இந்நிலையில், யுனெஸ்கோவின் பாரம்பரிய கமிட்டி சார்பில் 45-வது கூட்டத்தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று நடந்தது. இதில், மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக, யுனெஸ்கோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவின் சாந்திநிகேதன், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.

    யுனெஸ்கோ பட்டியலில் சாந்திநிகேதன் இடம்பிடித்ததைக் கொண்டாடும் வகையில், விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் முழுதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    • இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாயில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.
    • அப்போது, எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இந்தியா கூட்டணியை வழி நடத்துவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    துபாய்:

    வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வழியில் நேற்று துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தங்கியிருந்தார். அப்போது இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அவரை சந்தித்தார்.

    அப்போது, ரணில் விக்ரமசிங்கே மம்தாவிடம், உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்தியா கூட்டணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு சிரித்தவாறே பதிலளித்த மம்தா பானர்ஜி, அது மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்கள் எங்களை ஆதரித்தால், நாங்கள் நாளை ஆட்சியில் இருப்போம் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே துபாய் விமான நிலைய ஓய்வறையில் என்னை சந்தித்தார். கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்தார். பணிவுடன் அதனை ஏற்றுக்கொண்டேன். அப்போது, கொல்கத்தாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில் உச்சி மாநாட்டில் பங்கேற்க அவரை அழைத்தேன். இலங்கை வருமாறு எனக்கு அவரும் அழைப்பு விடுத்தார் என குறிப்பிட்டுள்ளார்.

    • ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார்.
    • இந்தியாவின் சுப்மன் கில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.

    ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். 2-ம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்ஸி வான்டெர் டுசன் தொடருகிறார்.

    மூன்றாவது இடத்தில் இந்தியாவின் சுப்மன் கில் உள்ளார். நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் கில் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். இதனால் 750 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசையில் 3-வது இடம் பிடித்தார்.

    இந்திய வீரர் விராட் கோலி 10-வது இடத்தில் தொடருகிறார்.

    இஷான் கிஷன் பல்லேகலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் அடித்தார். இதன்மூலம் தரவரிசையில் 12 இடம் உயர்ந்து 24-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இதேபோல், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடமும், மிட்செல் ஸ்டார்க் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி முதல் இரண்டு ஆட்டங்களில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் தரவரிசையில் 4 இடம் முன்னேறி 5-வது இடம் பிடித்துள்ளார். அதேசமயம் சக வீரர்களான ஹரிஸ் ரவூப், நசீம் ஷா ஆகியோரும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். வங்காளதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் 2 இடம் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    இதேபோல், டி20 போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் தொடருகிறார். தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் 3-வது இடத்திலும், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் 2-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 104 நாடுகளில் உள்ள 257 இடங்களுக்கு விமான சேவை உள்ளது
    • 2023 முதல் ஆறு மாதங்களில் 41.6 பயணிகள் வருகை தந்துள்ளனர்

    உலகில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் துபாய் சர்வதேச விமான நிலையமும் ஒன்று. எப்போதும் பரபரப்பானதாக காணப்படும். பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கான முனைமமாக செயல்பட்டு வருகிறது. விமானங்கள் தரையிறங்குவதும், புறப்படுவதுமாகவும் இருக்கும்.

    கொரோனா தொற்று ஏறக்குறைய முற்றிலும் முடிவடைந்ததாக கருதப்படும் நிலையில், விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 41.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது 2019-ம் ஆண்டைவிட அதிகமாகும்.

    உலகளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் சேவையில் முன்னணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 104 நாடுகளில் உள்ள 257 இடங்களுக்கு விமான சேவை உள்ளது.

    கடந்த வருடம் இதே காலத்தில் 27.9 மில்லியன் பயணிகள் என்ற வகையில் இருந்தது. தற்போது அதே காலக்கட்டத்தில் சுமார் 50 சதவீதம் அதிகரித்து 41.6 மில்லியன் பயணிகளாக உயர்ந்துள்ளது. விமான நிறுவனங்கள் அதிகமான இடங்களுக்கும், அதிகமான விமானங்களையும் இயக்கி வருகின்றன. 2018-ல் 89.1 மில்லியன் பயணிகள், 2019-ல் 86.3 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையம் பார்த்திருந்தது. 2022-ல் 66 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த வருடம் 85 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எமிரேட் நிறுவுனம் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக அளவில் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் துபாய்க்கு வருகை தருவது அதிகரிப்பு காரணமாக 2.9 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது.

    ×