என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
அதேநேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலை யில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.28 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 1,062 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 900 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1,055 கன அடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
இதேப்போல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 34.37 அடியாக உள்ளது.
பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 24.08 அடியாக உள்ளது. வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 26.74 அடியாக உள்ளது.
- கேமிராவில் அந்த ஒற்றை காட்டு யானை கண்டறிய முடியவில்லை.
- 2 கும்கி யானைகள் லாரிகளில் ஏற்றி திரும்ப முதுமலை தெப்பக்காடு முகாமிட்டு அனுப்பி வைத்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள பெருமுகை ஊராட்சி அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை ஆண் காட்டு யானை வெளியேறிய வரப்பள்ளம் ஆற்றங்கரை யோர விவசாய தோட்ட பகுதியில் சுற்றி திரிந்தது.
அப்போது அடசபாளை யம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை என்கிற சித்தேஷ்வரன் என்பவரை யானை மிதித்து கொன்றது.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்து றையினர் அந்த ஒற்றை காட்டு யானையை பெரு முகை வனப்பகுதி க்குள் விரட்டி அனுப்பினர்.
மீண்டும் அந்த காட்டு யானை ஊருக்குள் வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று மக்கள் அச்சப்படுவதால் ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகளை கொண்டு வந்து பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகேயுள்ள உரம்புகிணறு மாரியம்மன் கோவில் பகுதியில் வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அடங்கிய முகாமில் கட்டி வைத்து உணவு கொடுத்து வந்தனர்.
இதனையடுத்து பெருமு கை வனப்பகுதியில் ட்ரோன் கேமிரா மூலமாக அந்த ஒற்றை காட்டு யானையை கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 5-ந் தேதி இரவு பெருமுகை ஊராட்சி சஞ்சீவிராயன் கோவில் அருகிலுள்ள உரம்புகிணறு மாரியம்மன் கோவில் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட முகாமிற்கு கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகள் 2 லாரிகளில் ஏற்றி திரும்ப முதுமலை தெப்பக்காடு முகாமிட்டு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வனத்து றையினர் கூறியதாவது:-
கேமிராபெருமுகை வனப்பகுதியில் கடந்த 6-ந் தேதி முதல் பல்வேறு இடங்களில் டிரோன் கேமிரா மூலமாக ஒற்றை காட்டு யானையை பகல், இரவாக முகாமிட்டு தேடி வந்தோம்.
ஆனால் கேமிராவில் அந்த ஒற்றை காட்டு யானை கண்டறிய முடியவில்லை. கேமிராவில் தென்படாத வகையில் அந்த ஒற்றை காட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று இருக்கலாம்.
இதனால் வரவழை க்கப்பட்ட பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய 2 கும்கி யானைகள் திரும்ப முதுமலை முகாமிற்கு திருப்பி அனுப்பியதாக அந்தியூர் வனத்துறை வனச்சரகர் உத்திரசாமி தெரிவித்தனர்.
கருப்பன் யானை தான் பெருமுகை வனப்பகுதிக்கு மற்றும் ஊருக்குள் வந்து விட்டதாகவும், அந்த யானை தான் சித்தேஷ்வரன் என்ப வரை தாக்கி கொன்ற தாகவும், சமூக வலை தளங்கள் மூலமாக பதிவிட்ட செய்தி மக்களிடத்தில் அச்ச த்தை ஏற்படுத்தி வந்தது.
ஆனால் வனப்பகுதிக்குள் சென்ற அந்த ஒற்றை காட்டு யானை அடர்ந்த வனப்பகு திக்குள் சென்றதாக வனத்து றையினர் தெரிவித்ததை அடுத்து கருப்பன் என்ற வதந்திக்கு இது ஒரு முற்று புள்ளியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
- ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
- பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறை:
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (70). கடந்த 5 வருடமாக பெருந்து றை மடத்துப்பா ளை யம் பிரிவு அருகே அமைந்துள்ள மோட்டார் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையாகிய இவர் வேலைக்கு வரும் பொழுது மது அருந்தி வந்துள்ளார். மேலும் ராம சாமி வயிற்று வலி காரண மாக மருந்து மாத்திரை உட்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று காலை ராமசாமி கடையின் முன் உள்ள கேட்டின் அருகே உள்ள இரும்பு கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு ந்து ள்ளார்.
உடன் பணி புரிந்தவ ர்கள் இதைக்க ண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வ மனைக்கு அழைத்து சென்ற னர். அங்கு அ வரை பரிசோ தனை செய்த டாக்டர் ஏற்க னவே ராம சாமி இறந்து விட்டதாக கூறினர்.
இந்த சம்ப வம் தொட ர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மே ற்கொண்டு வருகின்றனர்.
- தரமான சான்று விதை உற்பத்தி குறித்த புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
- சான்று விதை உற்பத்தி குறித்து விளக்கம் அளித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட அரசு வி தை உற்பத்தியாளர்களுக்கு ஈரோடு மாவட்ட விதைச்சா ன்று மற்றும் அங்ககச்சான்று துறை சார்பில் தரமான சான்று விதை உற்பத்தி குறித்த புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது.
ஈரோடு வேளாண் இணை இயக்குனர் அலுவ லகத்தில் நடந்த பயிற்சிக்கு இணை இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உயர் விளைச்சல் தரக்கூடிய புதிய பயிர் ரகங்களில் தரமான விதை உற்பத்திக்கு தேவையான அனைத்து தொழில் நுட்பங்களையும் தவறாமல் கடைபிடித்து, தரமான சான்று விதைகளை உற்பத்தி செய்ய வேண்டும்.
பருவத்து க்கு ஏற்ப விவசாயிகளுக்கு விதை வினியோகம் செய்ய வேண்டும் என்றார்.
வேளாண் துணை இயக்குனர் (மாநில திட்டம்) தமிழ்செல்வி பேசும்போது, ''நடப்பாண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சிறு தானியங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து அரசு விதை உற்பத்தியாளர்களும், விவசாயிகளின் தேவை அறிந்து விதைகளை வழங்க வேண்டும்,''
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம், தொழில் நுட்பங்கள் குறித்து பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் 42 பஞ்சாயத்துகளில் விவசாயி களை அதிக அளவில் தேர்வு செய்து உரிய தொழில் நுட்ப பயிற்சி வழங்கி விதை பண்ணைகளை அதிகமாக அமைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
விதை சான்று அலுவலர் ராதா, மாவட்ட விதை சான்று அலுவலர்கள் மாரிமுத்து, தமிழரசு, நாசர் அலி, ேஹமாவதி ஆகியோர் பயிற்சி வழங்கினர்.
பாசி பயிறு, உளுந்து, தட்டை பயிறு, கொள்ளு, துவரை, சிறு தானிய பயிர்களான ராகி, சோளம் போன்றவற்றின் சான்று விதை உற்பத்தி குறித்து விளக்கம் அளித்தனர்.
- ரோஹீம் காஜீ மனைவி கோபினாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
- கொலை செய்த கணவனை போலீ சார் கைது செய்து வந்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர் சின்னச்சாமி செங்கல் சூளையில் கொல்கத்தா, பெலிசிடா மாவட்டம், நெலிபாரியை சேர்ந்த ரோஹீம் காஜீ (43) மற்றும் இவரது மனைவி கோபினா (24) ஆகியோர் அந்தியூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார்கள்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ரோஹீம் காஜீ மனைவி கோபினாவை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்நிலையில் இவரை வட மாநில பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். மேலும் தமிழ்நாட்டிற்கு மீண்டும் செங்கல் சூளை பகுதியில் வேலை செய்ய வந்துள்ளாரா? என்றும் போலீசார் அவ்வப்போது தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள செங்கல் சூளையில் ரோஹீம் காஜீ வேலைக்கு சேர்ந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை யடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று ரோஹீம் காஜியை கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியை கொலை செய்த கணவனை போலீ சார் கைது செய்து வந்தது அந்தியூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
- ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை பணிகளை கள ஆய்வு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, ஈரோடு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோ ட்டம் மூலமாக செயல்படுத்தப்படும் பணிகளை உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
கோவை வட்டம், தேசிய நெடுஞ்சா லைத்து றை அலகு கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையிலான இந்த உள் தணிக்கைக்குழு கடந்த வாரம் முதல் ஆய்வு பணி கள் மேற்கொண்டுள்ளது.
இக்குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் செயல்படுத்தி வந்த ஈரோடு வெளிவட்ட சுற்றுச்சாலை பணிகளை கள ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது ஈரோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட ப்பொறியாளர் மாதே ஸ்வரன், உதவிக்கோட்டப் பொறியாளர் சரவணன், தரக்கட்டுப்பாடு உதவிக்கோட்டப் பொறியாளர் கண்ணன்,
பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை உதவிக்கோட்ட ப்பொறியாளர் ராமுவேல், ஈரோடு கட்டுமானம் பராமரிப்பு உதவிப்பொறியாளர் சுரேஷ் மற்றும் தரக்கட்டுப்பாடு உதவிப்பொறியாளர் ஞானசேகரன்,
கோவை தேசிய நெடுஞ்சாலை உதவி ப்பொறியாளர் கவுதம் மற்றும் சத்தியபிரபா, தேசியநெடுஞ்சாலை உதவிப்பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- முக்கிய நிகழ்ச்சியான திருவிழா இன்று நடந்தது.
- அக்னி கும்பம் எடுத்து வருதல், பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
கோபி:
கோபி கடைவீதியில் பிரசித்தி பெற்ற சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருட ந்தோறும் சித்திரை மாதம் சித்திரை பெருந்தி ருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான பூச்சாட்டுதல் விழா கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. 10-ந் தேதி திருக்கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், 15-ந் தேதி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து 16-ந் தேதி 108 விளக்கு பூஜை, பூச்சொரிதல் நிகழ்ச்சி மற்றும் பட்டுபோர்த்தி ஆடு தல் நிகழ்ச்சியும் நடந்தன. 17-ந் தேதி பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், மலர் பல்லக்கில் அம்மை அழைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சியான திருவிழா இன்று நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும், பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடை பெற்றது.
அதைத்தொ டர்ந்து அக்னி கும்பம் எடுத்து வருதல், பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து இரவு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடை பெறுகிறது. அதை த்தொடர்ந்து பூத வாகன காட்சி நடக்கிறது. நாளை மஞ்சள் நீர் உற்சவம், அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
நாளை மறுநாள் மஞ்சள் நீர் உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியோடு இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவு நடைபெறுகிறது.
- கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
- தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழு வதும் போலீசார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாள வாடி சி ஹெச் நகர் ரோடு, சோதனை சாவடி அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மதுவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடமிருந்த 12 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் தாளவாடி அடுத்த திகினாரை, அம்பேத்கர் தெருவை சேர்ந்த பசுண்ணா (38) என்ன தெரிய வந்தது.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து பசுண்ணாவை கைது செய்தனர்.
இதேப்போல் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சித்தோடு அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.
சென்னிமலை:
சென்னிமலை வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ள சி.சி.ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரிக்கு சி.சி.ராஜேந்திரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நான் 1996-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், விவசாய பிரிவில் மாநில கொள்கை பரப்பு செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்,
திருப்பூர் வடக்கு மாவட்ட பொது செயலாள ராகவும், மாநில பேச்சாளர், சென்னி மலை வட்டார காங்கிரஸ் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்பு களில் கடந்த 28 ஆண்டு காலம் பணியாற்றி வந்துள்ளேன்.
தற்போது குடும்பச்சூழல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கொள்றேன்.
இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
- ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.
- இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
சென்னிமலை:
சென்னிமலையில் காங்கேயம் ரோடு, அரச்சலூர்ரோடு, நான்கு ராஜா வீதிகள், பெருந்துறை ரோடு, ஊத்துக்குளி ரோடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து முடிவெடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்படடது.
இக்குழு வும் அறிக்கை தாக்கல் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், இதுவரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட கலெக்டர் நேரடி யாக தலையிட்டு ஆக்கிரமிப்பு க்களை அகற்றி, சாலை விரிவாக்க த்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எண்டோஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது.
- காப்பீடு திட்டத்தன் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பெருந்துறை:
பவானியை அடுத்துள்ள குருவரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் பவுனாயாள் (48). இவர் கடந்த 3 மாதமாக மூளை நீர் வலது மூக்கு வழியாக தன்னிச்சையாக வருவதாகவும் கடுமையான தலை வலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு நவீன முறையில் சி.டி. ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூக்கின் வழியாக மூளை தண்டுவட நீர் கசிவு நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய போதிய உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் டாக்டர்கள் உதவியுடன் அமெரிக்காவாழ் தமிழ் மருத்துவர்கள் சங்கம் சார்பாக உபகரணங்கள் வாங்கப்பட்டு அவருக்கு அதிநவீன அறுவை சிகிச்சை முறையில் வெளிபுறம் ஏதும் காயமின்றி மூக்கின் வழியாக உள்நோக்கும் கருவி மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் எண்டோஸ்கோப்பி வழியாக மூளை தண்டுவட நீர் கசிவை அடைத்தல் அறுவை சிகிச்சை முதன் முறையாக பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி அறிவுறுத்துத்தலின் படி மருத்துவ கண்காணிப்பாளர் சிவராமரன் தலைமையில் காது, மூக்கு, தொண்டை மருத்துவக் குழு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்த அறுவை சிகிச்சையை முடித்தனர்.
மேலும் கடந்த 12 நாட்களாக சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார். பவுனாயாள் தற்போது மூளை நீர் வருவது நின்று தலைவலி குறைந்து நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் கூறினர். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் செய்தால் ரூ.2 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தன் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
- புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்னிமலையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக்கழக அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மற்ற பகுதியில் உள்ள அரிசி ஆலைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசி சம்பந்தமாக முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அரிசி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
இது தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்