என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நீரழிவு நோயாளிகளுக்கான சோயா - கோதுமை கஞ்சி
Byமாலை மலர்9 Dec 2017 8:56 AM IST (Updated: 9 Dec 2017 8:56 AM IST)
சோயா - கோதுமை கஞ்சியைப் பருகினால், நீரழிவு உள்ளவர்களுக்கு ஏற்படும் உடல் தளர்ச்சி சீராகும். இன்று இந்த கஞ்சி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சோயா பீன்ஸ் - 1 கப்,
கோதுமை - 1 கப்,
வெந்தயப்பொடி (விரும்பினால்) - ஒரு சிட்டிகை,
வெல்லம் - தேவையான அளவு,
காய்ச்சி ஆற வைத்த பால் - தேவையான அளவு.
செய்முறை :
சோயா பீன்ஸ், கோதுமையை வெறும் கடாயில் போட்டு தனித்தனியே வறுத்துப் பொடித்து கொள்ளவும்.
இதனுடன் வெந்தயப் பொடி சேர்த்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியை செய்து வைத்து கொண்டால் போதும் தேவைப்படும் போது செய்து கொள்ளலாம்.
அடுப்பில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் 2 டீஸ்பூன் சோயா பீன்ஸ் பவுடரை சிறிது தண்ணீரில் கரைத்து கொதிக்க தண்ணீரில் ஊற்றி கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
நன்றாக வெந்து பக்குவம் வந்தவுடன் வெல்லம், காய்ச்சிய பால் சேர்த்து பருகவும்.
சத்தான சோயா - கோதுமை கஞ்சி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×