search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    சூரிய நமஸ்காரம் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்...
    X

    சூரிய நமஸ்காரம் செய்யும் போது செய்யக்கூடாத தவறுகள்...

    • வெறும் தரையிலோ, கட்டிலின் மீதோ செய்வது சரியானது அல்ல.
    • நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்துணர்வு கிடைக்கும்.

    மேலோட்டமாகப் பார்த்தால் சூரியனை நோக்கி கையெடுத்துக் கும்பிடும் எளிதான முறையாகவே தோன்றும். ஆனால், இதற்குப் பின்னால் பல நுட்பமான வழிமுறைகள் இருக்கின்றன. சூரிய உதயம், சூரிய அஸ்தமன வேளைகளில் பயிற்சி செய்வதனால் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். சூரியனைப் பார்த்தவாறு பயிற்சி செய்ய விரும்பினால் அதிகாலை வேளைதான் சிறந்தது. சூரிய உதயத்துக்குப் பிறகு சூரியனை நேரடியாகப் பார்த்து பயிற்சி செய்வது கண்களைப் பாதிக்கும்.

    உடலை இறுக்காத, மென்மையான உடைகள் அணிந்து கொள்வது அவசியம். உணவுக்குப் பிறகு 4 மணி நேரமும், சிற்றுண்டி சாப்பிட்டிருந்தால் 2 மணி நேர இடைவெளியும் அவசியம். எந்த உடற்பயிற்சியையும் காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்வதே சரியானது. சூரிய நமஸ்காரமும் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் செய்யப்பட்டால்தான் நாம் எதிர்பார்க்கிற நன்மைகளைத் தரும். தவிர்க்க முடியாத காரணங்களால் அறைக்குள் பயிற்சி செய்வதாக இருந்தால் காற்றோட்டம் உள்ள அறையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மேடு பள்ளம் இல்லாத தரையில் ஜமுக்காளம் விரித்து, அதன்மேல் பயிற்சி செய்ய வேண்டும். வெறும் தரையிலோ, கட்டிலின் மீதோ செய்வது சரியானது அல்ல. கண்ணாடி மற்றும் ஆபரணங்கள் பயிற்சி யின் போது சிரமங்களை உருவாக்கும் என்பதால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. உடல் சோர்வு இருக்கும்போதோ, நீண்டதூரப் பயணம் செய்த பிறகோ பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

    தலைவலி, காய்ச்சல், மாதவிலக்கு காலங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், இதயநோய், முதுகுவலி, கழுத்துவலி உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் செய்யக் கூடாதுஎலும்பு, தசை, சுவாசம், ரத்தம், ஜீரணம், கழிவு உறுப்புகள், நரம்பு, நாளமில்லா சுரப்பிகள் ஆகியவை சீராக இயங்க சூரிய நமஸ்காரம் பெரிதும் உதவி செய்கிறது. இதனால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், புத்துணர்வு கிடைக்கும்.

    சருமம் பொலிவு பெறும். எடை சீராகும். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டுகள் வலுவடையும். தண்டுவடம் தளர்வடைவதால் முதுகுவலி வராது. நிமிர்ந்து நடக்கும் பழக்கம் உண்டாகும். உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படும். சுய கட்டுப்பாடு உண்டாகும். நுரையீரல் விரிவடையும், குதிகால் நரம்பு, பாதம், தொண்டை, கழுத்து ஆகிய இடங்கள் வலிமை பெறும். மலட்டுத்தன்மை நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். மந்த நிலையைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். உடல் கழிவுகள் வெளியேறும். சூரிய நமஸ்காரம் செய்த பின் செய்கிற பிராணாயாமங்களின் பலன் அதிகரிக்கும்... இதுபோல் எத்தனையோ பலன்கள் உள்ளன!

    இந்த 12 நிலைக்குப் பிறகு யோகாசனங்கள், பிராணாயாமம் செய்வது அபரிமிதமான பலன்களைத் தரும். சூரிய நமஸ்காரம் பற்றிய விழிப்புணர்வுக்காகவும், சூரிய நமஸ்காரம் கற்றுக் கொண்ட பிறகு ஒரு வழிகாட்டியாகவும் உங்களுக்கு உதவவே இதில் விரிவாக விளக்கியிருக்கிறோம். சூரிய நமஸ்காரம் உள்பட எல்லா யோகா பயிற்சிகளையும் தகுதிவாய்ந்த ஒரு யோகா ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி செய்வதே நல்லது. குறைந்தபட்சம் சூரிய நமஸ்காரத்தை ஒருமுறையாவது குருவின் வழிகாட்டுதலின்படி கற்றுக் கொண்டு, அதன்பிறகு பயிற்சி செய்யுங்கள்!

    Next Story
    ×